Sat. Dec 28th, 2024
Premiere Show – Canadian Production Tamil Film “Oruththi”

பி.எஸ்.சுதாகரன் தயாரித்து இயக்கிய ‘ஒருத்தி’ திரைப்படம் இன்று சனிக்கிழமை Premiere Show ஆக திரையிடப்பட்டது. இத்திரைப் படத்தின் காட்சிகள் யாழ்ப்பாணத்திலும், கனடாவிலும், படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தில் கனடா, தமிழ்நாடு, இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கலைஞர்கள் நடித்துள்ளார்கள். வானொலிக் கலைஞராக அறிமுகமாகி சிறந்த தொலைக்காட்சிக் கலைஞராகவும் திரைப்படக் கலைஞராகவும் மிளிர்ந்துள்ள கலைஞர் பி.எஸ்.சுதாகரன் தமது இருபது ஆண்டு கால கலைத்துறை அனுபவத்தைக் கொண்டு இத்திரைப்படத்தினை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளார். Richmond Hillஇல் 115 York Blvd. முகவரியில் அமைந்துள்ள York திரையரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு ‘ஒருத்தி’ திரைப்படம் திரையிடப் பட்ட வேளையில் சிறிய அறிமுக விழா ஒன்றும் திரையரங்கின் மத்திய மண்டபத்தில் முதல் நாள் அறிமுகக் காட்சியைக் கண்டு களிப்பதற்குத் திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது. ‘ஒருத்தி’ திரைப்படத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஏறத்தாழ அனைவரும் சமூகமளித்திருந்தார்கள். அந்த விழாவின் தொகுப்பினை இங்கே தருகிறோம்.

Related Post